ஜெருசலேம்: பிரதமர் மோடி வரும் பிப்.25, 26ஆம் தேதிகளில் இஸ்ரேல் செல்ல உள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் மோடியின் வருகை குறித்த தகவலை முதலில் தெரிவித்தார். பிரதமர் மோடியின் இஸ்ரேல் சுற்றுப்பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இஸ்ரேலிய நெசெட்டில் (பாராளுமன்றம்) உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனது இரண்டு நாள் பயணத்தின் போது இருதரப்பு மற்றும் பிராந்திய நலன் சார்ந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
