அமெரிக்காவில் இந்திய மாணவர் மாயம்

நியூயார்க்: கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சகேத் ஸ்ரீனிவாசய்யா(22). சென்னை ஐஐடியில் இளங்கலை படிப்பை முடித்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்லே பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை முதல் ஸ்ரீனிவாசய்யாவை காணவில்லை என்று தெரிகின்றது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்க் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாசலில் அவரது பாஸ்போர்ட் மற்றும் மடிக்கணினி, அவரது பை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் மாயமானது குறித்து இந்திய துணை தூதரகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

Related Stories: