நியூயார்க்: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் பகுதியில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவால் 15 பேர் சிக்கி கொண்டனர். எனினும், பனிக்கட்டிகளுக்கும், பனிச்சரிவுகளுக்கும் மத்தியில் அவர்கள் தவித்து வந்தனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
இதில் மீட்கப்பட்ட 6 பேரில், 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, காணாமல் போன மீதமுள்ள 9 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கமும் அந்த பகுதியில் காணப்படுகிறது.
இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பல மணிநேர போராட்டத்திற்கு பின்னரே 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீதமுள்ள பேரை தேடும் பணியில் மீட்பு படையினார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
