அரசு இசை பள்ளியில் 27ம் ஆண்டு விழா

கிருஷ்ணகிரி, பிப்.16: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியின் 27ம் ஆண்டு விழா நடந்தது. கலை பண்பாட்டு துறை சேலம் மண்டல மையத்தின் கீழ் இயங்கி வரும், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியின், 27வது ஆண்டு விழா மற்றும் தமிழிசை விழா நடந்தது. இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரிவேணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலை பண்பாட்டுத்துறை சேலம் மண்டல உதவி இயக்குனர் சங்கரராமன் சிறப்புரையாற்றி, இசைப்பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் தமிழ்செல்வி, குரு ஜெயந்தி ஸ்ரீதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிறப்பு வாய்ப்பாட்டு நிகழ்ச்சியை வாகீஷ் கிருஷ்ணன் குழுவினரும், சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சியை சோமசேகர் குழுவினரும் நிகழ்த்தினர். இதில், இசைப்பள்ளி மாணவ, மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், பாடல் பாடுதல், பல்வேறு வாத்தியங்களை கொண்டு வாசித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், இசைபள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், இசை ஆர்வலர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: