போச்சம்பள்ளி, பிப்.14: காவேரிப்பட்டணத்தில், சாய்ந்த நிலையில் சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். காவேரிப்பட்டணத்தில் இருந்து தளிகைப்பட்டி வழியாக செல்லும் மெயின் சாலையில், பெண்ணேஸ்வரமடம் பகுதி அமைந்துள்ளது. விவசாயிகள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்கள் தளிகைப்பட்டி வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், இந்த சாலையில், கடந்த சில நாட்களாக 2 மின் கம்பங்கள் சாய்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். பலத்த காற்று வீசினால், இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சாய்ந்து கிடக்கும் கம்பத்தை மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
