கிருஷ்ணகிரி, பிப்.18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள துவங்கியது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு நேற்று துவங்கியது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்று துவங்கி வரும் மார்ச் மாதம் 11ம் தேதி முடிகிறது. அதே போல பிளஸ் 2 தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி முடிகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 57 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த, 2,599 பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த, 1,893 மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் நடக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 9 தேர்வு மையங்களில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
