ஓசூர், பிப்.10: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை, முல்ைலப்பூ, ரோஜா, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா, சாமந்தி, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பண்டிகை சீசனுக்காக பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல வகை பூக்களை குடில் அமைத்து சாகுபடி செய்து வருகின்றனர். பறிப்பிற்கு பின், பூக்களை விவசாயிகள் உழவர் சந்தை மற்றும் இதர மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். நேற்று உழவர் சந்தையில் மல்லிகை ரூ.800, முல்லை ரூ.1000, கனகாம்பரம் ரூ.800, என பூக்களின் விலை உயர்ந்தது. மேலும், சாமந்தி- ரூ.200 ,காகடான்- ரூ.300, பட்டன் ரோஜா- ரூ.80, துளசி ரூ.50, சம்பங்கி ரூ.60, அரளி ரூ.300க்கு விற்பனையானது.
