காவேரிப்பட்டணம், பிப். 5: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டார கிராமத்தில், மண் மாதிரி எடுக்கும் முறை பற்றி, வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். வேளாண்மை படிக்கும் மாணவிகள் கொண்ட குழு, வாரந்திர வேளாண்மை மற்றும் பயிற்சி திட்டத்தின் கீழ் தங்கி உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் 8 முதல் 10 இடங்களில் மண் எடுக்க வேண்டும். மேல்மண் கழிவுகளை அகற்றி 0-15 செ.மீ (பாசன பயிர்களுக்கு) ஆழத்தில் மண் எடுக்கவும், அதிலிருந்து சுமார் அரை கிலோ மண்ணை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதிரி தயாரித்தல், மண்ணை நிழலில் உலர்த்தவும் கல், வேர், இலை போன்றவை நீக்க வேண்டும் என விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
