ஊத்தங்கரையில் எருதாட்ட விழா கோலாகலம்

ஊத்தங்கரை, பிப்.10: ஊத்தங்கரையில், எருதாட்ட விழா கோலாகலமாக நடந்தது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 75வது ஆண்டு எருது கட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி திரௌபதி அம்மன், தர்மர், பீமன் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கோயில் முன் எருதுகளுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டு கயிறுகள் கட்டி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடினார். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயில் எருதுகள் பங்கேற்றது. மேலும், ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகம் காணப்பட்டதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Related Stories: