பேட்டராய சுவாமி கோயிலில் 32 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா

தேன்கனிக்கோட்டை, பிப்.11: தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோயிலில் 32 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கோயில்களில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில், மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள பேட்டராயசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். தேன்கனிக்கோட்டை சரக ஆய்வாளர் வேல்ராஜ், அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் அருள்மணி ஆகியோர் 32 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தனர். தம்பதிகளுக்கு மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம், பூ, பழம், வாளையல், வேட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சீனிவாசலுரெட்டி மற்றும் கோயில் திருப்பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: