ஓசூர், பிப்.18: ஓசூரில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து அம்மனை வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், முக்காண்டப்பள்ளி அருகே தேசிங்கு நகரில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை பால் கம்பம் நட்டு, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள், நேர்த்திக்கடன் தீர்க்க காப்பு கட்டி விரதமிருந்து தீச்சட்டி, 101 பால்குடங்களுடன் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து, அக்கினி குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில், முக்கிய வீதிகளில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து விழாவின் கடைசி நாளான நேற்று திரளான பக்தர்கள் பங்கேற்று பெரியாயி அம்மனை வழிப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசி அமாவாசை மயான கொள்ளை பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ மிதி விழா
- அங்கலபரமேஸ்வரி அம்மன் கோயில்
- ஓசூர்
- அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா
- அங்காள
- பரமேஸ்வரி
- அம்மன்
- கோவில்
- தேசிங்கு நகர்
- கிருஷ்ணகிரி மாவட்டம் முக்கண்டப்பள்ளி...
