மகாராஜகடை அருகே அனுமதியின்றி எருதாட்டம் 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, பிப்.10: கிருஷ்ணகிரி அருகே உள்ள மகராஜகடை அடுத்த கொட்டாவூர் கிராமத்தில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மகாராஜகடை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக சுப்பிரமணி (68) மற்றும் 4 பேர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், போலீசார் அனுமதியின்றி எருது விடும் விழாக்கள் நடந்து வருகிறது. அசம்பாவித நிகழ்வுகள் அரங்கேறி வருவதை தடுக்கவே, எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனுமதியின்றி எருது விடும் விழாக்கள் நடத்தக்கூடாது,’ என்றனர்.

Related Stories: