மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைவு

காவேரிப்பட்டணம், பிப்.14: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோவிந்தராஜ் ஏற்பாட்டில், மாற்றுக் கட்சியை சேர்ந்த கனிமொழி தலைமையில் ராஜேஸ்வரி, மகேஸ்வரி, அருணா, சச்சின், பரத் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர், துணைப்பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்எல்ஏ, நவாப், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, இளைஞரணி பாசறை செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: