அசாம் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஓசூர், ஜன.30: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சானுதண்டி(26). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப் பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வேலை முடிந்து குடியிருப்புக்கு வந்ததும், அசாமில் இருக்கும் அவரது மனைவியுடன் அடிக்கடி செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். நீண்ட நேரம் நடக்கும் வீடியோ கால் உரையாடல், சில நேரங்களில் வாக்குவாதமாக மாறி வந்துள்ளது. இதேபோல் கடந்த 26ம் தேதி இரவு, சானுதண்டி மனைவியிடம் வீடியோ காலில் பேசியதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த சானுதண்டி, வீட்டில் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, குடியிருப்பு வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: