ஓமலூர் வட்டாரத்தில் பூத்து குலுங்கும் மாமரங்கள்

ஓமலூர், பிப்.14: ஓமலூர் வட்டாரத்தில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூக்கள் உதிராமல் எடுக்க வேண்டிய தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஓமலூர் வட்டார பகுதிகளில் அதிகளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் மாங்காய்கள் மற்றும் மாம்பழங்கள் அனுப்பப்படுகிறது. நடப்பாண்டு போதுமான மழை பெய்ததை தொடர்ந்து பெங்களூரா, நீலம், செந்தூரா, மல்கோவா, குதாதத், தேன்குண்டு ஆகிய மா மரங்களில் பூக்கள் அதிகமாக பூத்துள்ளது. இன்னும் 3 மாதங்களில் காய்கள் பிடித்து அறுவடைக்கு வந்துவிடும். தற்போது பூத்துள்ள பூக்கள் உதிராமல் தடுக்க, மரங்களுக்கு மருந்து தெளித்து, சுத்தம் செய்ய வேண்டும். சாம்பல், பூ அழுகல், இலைக்கருகல் நோய்கள் ஏற்படுவதை தடுக்க, இயற்கை பூச்சி விரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கி தெளிக்க வேண்டுமென தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: