நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி தொடக்கம்

கெங்கவல்லி, பிப். 5: ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம் ஊராட்சி, மேலகவுண்டப்பகுதியில், ரூ.18 லட்சம் மதிப்பில், 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கோபாலபுரம் பிரிவு ரோட்டில் ரூ.18.42 லட்சம் மதிப்பில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி, கோபாலபுரம் மேற்குகாடு பகுதியில் ரூ.18.42 லட்சம் மதிப்பில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுகிறது. ஆத்தூர் எம்எல்ஏ ஜெய்சங்கரன், பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் யூனியன் சேர்மன் அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: