ரூ.50 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

சங்ககிரி, பிப்.5: சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றியம் ஐவேலி ஊராட்சி சென்றாயக்கவுண்டனூரிலிருந்து, தோப்புகாடு வரை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.90 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, இருகாலூர் ஊராட்சியில் ரூ.24.50 லட்சம் மதிப்பில் சாலை மற்றும் கோட்டவருதம்பட்டி ஊராட்சி பாறைவளவு அருந்ததியர் தெருவில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ சுந்தரராஜன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சிவக்குமாரன், சரவணன், கருப்புசாமி, செல்லப்பன், மாதையன், கவிதா, வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: