கொங்கணாபுரத்தில் ரூ.6.31 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

இடைப்பாடி, பிப்.14: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நடைபெற்றது. சேலம் மற்றும் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 26 தேங்காய் மூட்டைகளை கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ரூ.133.50 முதல் ரூ.189.90 வரையிலும் 2ம் தரம் ரூ.105.10 முதல் ரூ.117.50 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் ரூ.6.31 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: