கால் வலி காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு (87) திடீரென தீவிரமான கால் வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான முதற்கட்ட பரிசோதனைகளைச் மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Related Stories: