குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: வருகிற 22ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. கடந்த 8ம் தேதி நடக்க விருந்த குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வானது, ஹால்டிக்கெட் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மார்ச் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குரூப்-2 பதவிகளுக்கான தாள்-2 பொது அறிவு(பாடத்தேர்வு) தேர்வு வருகிற 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒரு முறை பதிவுத்தளத்தின் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: