பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை கற்றல் ஆய்வு

சென்னை: தொடக்க கல்வித் துறை இயக்குநர் நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 3ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு அடிப்படை கற்றல் ஆய்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளுக்கான என்சிஇஆர்டியால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் கள அளவில் சோதனைகள் மேற்கொள்வதற்காக மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எஸ்சிஆர்டிஇ தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த மாதிரி வினாத்தாள்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைத்து, 3ம் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுசார்ந்து அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அளிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: