ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிவு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 700 கனஅடியாக சரிந்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 107 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 61 கனஅடியாக சரிந்தது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 91.29 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 91.09 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 53.90 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: