சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணி இந்திய தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினர் சென்னை வந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர்கள் பானு பிரகாஷ், மனேஷ் கார்க், கியானேஷ் பார்த்தி, பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.
அவர்களை, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் மானேஷ் கார்க், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல், தயார் நிலையை மதிப்பாய்வு செய்வதற்காக தற்போது தேர்தல் ஆணையத்தின் குழுவினராகிய நாங்கள் சென்னை வந்துள்ளோம். தேர்தல் நடக்க இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று, தேர்தல் பணிகளின், முழுமையான ஆயத்தை ஏற்பாடுகளை ஆய்வு செய்வது, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறை.

மாநில நிர்வாக அதிகாரிகள் மற்றும் தேர்தல் தொடர்பாக ஆயத்த கூட்டங்கள் நடத்தி, தேர்தலுக்கு அனைத்து பணிகளையும் தயார்படுத்துவது குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்பு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து, கார்கள் மூலம், புதுச்சேரி மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார். புதுச்சேரியில் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வை நடத்தி விட்டு, அதன் பின்பு, சென்னைக்கு திரும்பி வருவார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர், அடுத்த ஓரிரு தினங்களில் சென்னைக்கு வர உள்ளனர். சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், வருமானவரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசித்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories: