சிவன்மலையில் தைப்பூசத் திருவிழா நிறைவு

 

காங்கயம்,பிப்.11:காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு நாளான நேற்று, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ெதாடர்ந்து மலை அடிவாரத்தில் இருந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் இருந்து சுப்ரமணியர்,வள்ளி,தெய்வானையுடன் பல்லக்கில் மலைக் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பக்தர்கள் வழி நெடுகிலும் சுவாமிக்கு ஆரத்தி எடுத்னர்.அடிவாரத்தில் 1000 தேங்காய்கள் உடைக்கப்பட்டு நேர்த்திகடன் செலுத்தினர். மலைக் கோயிலில் அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இரவு திருவிழா கொடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச விழா நிறைவு பெற்றது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோயிலின் உதவி ஆணையர் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: