கொல்லிமலையில் 102 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை

சேந்தமங்கலம், பிப்.11: கொல்லிமலையில் 102 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையை வாரிய தலைவர் கனிமொழி வழங்கினார். கொல்லிமலை செம்மேட்டில் உள்ள பழங்குடியினர் அலுவலகத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா நேற்று நடந்தது. பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டார அட்மா குழு தலைவர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய தலைவர் கனிமொழி கலந்துகொண்டு 102 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை வழங்கி பேசுகையில் கொல்லிமலை முழுவதும் பழங்குடியினர் நலவாரியத் துறையின் மூலம் 8 ஆயிரம் பேருக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்தால் ஒரு மாதத்திற்குள் நலவாரிய அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அரசு வழங்கும் அனைத்து திட்டங்கள், சலுகைகள், மானியங்கள், விவசாய கருவிகள், நிவாரண நிதிகள், ஓய்வூதியங்கள் பெற்றுக் கொள்ளலாம். விரைவில் கொல்லிமலையில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது என்றார்.

Related Stories: