ரயில் மோதி முதியவர் பலி

நாமகிரிப்பேட்டை, மார்ச் 29: சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (65). இவரது தம்பி ஆறுமுகம்(60). இவர் வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் ஆயிபாளையம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், அண்ணாமலை, ஆறுமுகத்தைப் பார்ப்பதற்காக, அம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, சர்வீஸ் சாலையில் நடந்து வந்து ரயில்வே பாதையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக வந்த ரயில் அவர் மீது மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: