உலக நன்மை, அமைதி வேண்டி சிறப்பு பூஜை

திருச்செங்கோடு, மார்ச் 23: திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் நாகேஸ்வரி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் உகாதி பண்டிகைக்கு அடுத்து வரும் ஞாயிறு அன்று பொங்கல் விழா நடக்கும். வழக்கம்போல் இந்தாண்டும் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் உலக அமைதி, உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நாகேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு கோழி காணிக்கை செலுத்தப்பட்டு, பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனை வழிபாட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 

Related Stories: