சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை 3 மணி நேரம் இயங்காது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3 மணி நேரம் கடையடைப்பு போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட உள்ளனர்.
