சென்னை: தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே 11.19% என்ற பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தமிழ்நாட்டு மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இந்தியாவில் மின்சாதன பொருட்களில் 41% சதவீதம் ஏற்றுமதி தமிழ்நாட்டில் இருந்துதான் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
இந்த தொழில் வளர்ச்சியின் மூலம், மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் என்ற வளர்ச்சியை திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எட்டும் . தொழில் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
