உடையார்பாளையத்தில் மாற்று கட்சியிலிருந்து 40 பேர் திமுகவில் ஐக்கியம்

ஜெயங்கொண்டம், பிப்.5: தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையே தேவை என உணர்ந்து, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த 40 மேற்பட்ட மாற்று கட்சி தோழர்கள், திமுக மாவட்ட செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில், தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களை பொன்னாடை போர்த்தி திமுகவினர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் தனசேகர், உடையார்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் பேரூர் திமுக செயலாளர் கோபாலகிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு திமுகவினர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: