சேலம், ஏப்.14: சேலம் வீராணம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் வீராணம் பக்கமுள்ள தாதம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (53). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (36), தமிழ்சூர்யா (25) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 27ம்தேதி மதுபோதையில் சக்திவேலை, இருவரும் சேர்ந்து சரமாரி தாக்கினர். அதோடு கத்தியாலும் குத்தினர். இதில் சக்திவேல் காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த வீராணம் போலீசார், சதீஷ்குமார், தமிழ்சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
