பணம் கேட்டு கொடுக்காததால் மகனை உளியால் வெட்டிய தந்தை

சேலம், ஏப்.12: சேலம் கன்னங்குறிச்சி முத்துசாமி தெருவை சேர்ந்தவர் தனபால்(59). இவரது மகன் ஜோதிவேல் (29) மாற்றுத்திறனாளி. இவர்கள் இருவரும் தச்சு தொழிலாளிகள். நேற்று காலை பழுதாகியுள்ள டூவீலரை சரிசெய்வதற்காக மகன் ஜோதிவேலிடம் தனபால் ரூ.20 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என கூறிய ஜோதிவேல் 3ஆயிரம் ரூபாயை எடுத்து கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனபால் மகனிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அங்கிருந்த உளியை எடுத்து மகனை தாக்கினார். தடுத்ததால் அவரது கை மற்றும் நெஞ்சு பகுதியில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனபால் அங்கிருந்து தப்பினார். அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த ஜோதிவேலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் தப்பிய தனபாலை கன்னங்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: