பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

ஓமலூர், ஏப்.9: சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கல்லூரி மைதானத்தில் 100 சதவீத வாக்குபதிவை அடைய அனைவரையும் ஊக்குவிப்போம் என்று உறுதியேற்றனர். இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் பேரணியாக சென்று, வாக்குப்பதிவின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: