முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் கைது

கெங்கவல்லி, ஏப்.10: ஆத்தூர் அருகே, கீரிப்பட்டி பேரூராட்சி மாரியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (42). இவர் மீது ஆத்தூர், மல்லியகரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் மோசடி மற்றும் 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, மல்லியகரை பகுதியில், நடுரோட்டில் பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். அப்போது போலீசார் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி, மல்லியகரை எஸ்ஐ லாரன்ஸ் கென்னடி, நிலுவை வழக்கில் உள்ள குற்றவாளிகள் மீது புகார் அளித்தார். இதன் பேரில், கணேசன் (எ) ரெயின்போ கணேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: