காரிப்பட்டி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

சேலம், ஏப்.12: சேலம் மின்னாம்பள்ளி கக்கன்காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் (50). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 7ம்தேதி ராமலிங்கபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாஸ்கர் நேற்று காலை உயிரிழந்தார். இதுபற்றி காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: