சேலம், ஏப்.10: சேலம் கன்னங்குறிச்சி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கலையழகன். இவரது மகன் வசந்த்குமார்(25). இவர் பெங்களூரில் உள்ள பிரபலமான ஐடி நிறுவனத்தில் கடந்த மூன்று வருடமாக பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்தபோது வசந்தகுமார் வேலையை இழந்தார். அதன்பின்னர் பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணியாற்ற முயற்சி செய்து பார்த்தார். ஆனால் சரியான வேலை அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். மனஉளைச்சலில் இருந்த அவர் நேற்று காலை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
