அதிகளவு மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை

சேலம், ஏப்.12:சேலம் சின்னக்கடை வீதியை சேர்ந்தவர் சித்ரா (55). இவர் தற்போது கருப்பூர் அருகேயுள்ள கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள ஹவுசிங் போர்டில் வசித்து வந்தார். நெஞ்சு வலி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த அவர் அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கியுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: