கஞ்சா விற்ற வாலிபர் கைது

சேலம், ஏப்ரல் 13:சேலம் அடுத்த பனங்காடு அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1.10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சேலம் மாநகரில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று பனங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பனங்காடு சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தார். அவரிடம் இருந்த பையை சோதனையிட்டதில் உள்ளே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், அவர் மணியனூரைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: