வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜன. 23: உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்வாசகம் தலைமை வகித்தார்.

பணிப்பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புதல், பணி நெருக்கடியை நீக்குதல், கருணை அடிப்படையில் பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்துதல், கிராம நிர்வாக அலுவலரின் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் மதன்குமார், கிராம உதவியாளர் சங்கத்தின் பொறுப்பாளர் ராஜா, கிராம உதவியாளர் சங்கத்தின் நிர்வாகி கருப்புச்சாமி, நில அளவைத்துறையின் ஒன்றிப்பு சங்க நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்ட 40 ஆண்கள், 20 பெண்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: