அவிநாசி, ஜன. 26: அவிநாசி பழங்கரை எஸ்.கே.எல். மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட, மாநில அளவிலான முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா ‘‘இது நம்ம ஆட்டம் – 2026’’ போட்டிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார். குண்டு எறிதல், மட்டைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ்முகமது பாஷா மற்றும் திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் திருப்பூர் வடக்கு விஸ்வநாதன், அவிநாசி சிவப்பிரகாஷ், பூண்டி பழனிச்சாமி, ஒன்றிய இளைஞரணி ரமேஷ், பூண்டி நகர திமுக செயலாளர் கிருஷ்ணமுர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
