விபத்தில் விவசாயி பலி

பல்லடம்,ஜன.26: பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் முருகன் (50), விவசாயி. இவர், ஸ்கூட்டரில் பல்லடம் சென்றுவிட்டு, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காரணம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடு புரம் நால்ரோடு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், அங்கிருந்த சாலை தடுப்பில் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

Related Stories: