சென்னை: சென்னையில் கொடிக்கம்பங்கள் நட இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அரசியல், மத, சங்கங்களின் நிகழ்ச்சிகளில் கொடிக்கம்பங்கள் நட வழிமுறைகள் வெளியிடப்பட்டது. கொடிக்கம்பங்கள் நட சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம். மதச்சார்பான நிகழ்வுகளுக்கு கொடிக்கம்பங்கள் நட 7 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும். மதச்சார்பில்லாத நிகழ்வுகளுக்கு கொடிக்கம்பங்கள் நட 3 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கொடிக்கம்பங்கள் நட உதவி ஆணையர் அனுமதியளித்த பின் SMS மூலம் தகவல் அனுப்பப்படும்.
