கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர், ஜன.30: திருவையாறு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தாலுகா அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் வட்ட செயலாளர் விமலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் கழிவறை, குடிநீர் மற்றும் இணைய வசதிகள் செய்து தர வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில், கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என்று மாற்றியமைக்க வேண்டும், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும், 20 ஆண்டு பணி முடித்தவர்கள் சிறப்புநிலை கிராம நிர்வாக அலுவலர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

 

Related Stories: