பாடாலூரில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

பாடாலூர், ஜன. 30: பாடாலூரில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை பாடம் நடத்தி வரும் 115 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் எண்ணும் எழுத்தும் என்ற பாடம் நடத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 3ம் பருவ பயிற்சி வகுப்பு பாடாலூரில் நேற்று நடைபெற்றது.

இப்பயிற்சியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நிகழ்விற்கு வட்டார கல்வி அலுவலர்கள் விஜயா மற்றும் அருண்குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் வஹிதா பானு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் பழனிசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். ஆலத்தூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மோகன், பரிமளா, அன்பரசு, தலைமலை, வேல்முருகன் ஆகியோர் பயிற்சியின் கருத்தாளராக செயல்பட்டனர். முடிவில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியை ரெங்கநாயகி நன்றி கூறினார்.

 

Related Stories: