பாடாலூர், ஜன. 28: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், பற்றாளருமான தமிழரசன் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி வரவு செலவுகள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் டி.களத்தூர், நத்தக்காடு ஆகிய கிராமங்களிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
