இரூர் சிப்காட்டிற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு

பெரம்பலூர், ஜன.23: பெரம்பலூர் இரூரில் சிப்காட்டிற்கு தங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, இரூர் கிராமப் பகுதியில் சிப்காட் அமைக்க நிலம் கையகப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரூர் கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மகன் தங்கராஜ், பழனி முத்து மகன் சதீஷ், மங்கான் மகன் பழனிமுத்து, முத்துசாமி மகன் பெரியசாமி, கட்டை மருதை மகன் சுந்தரம் மற்றும் ராஜலட்சுமி, கோவிந்தம்மாள், சின்னதுரை, நீலமேகம், அருணாச்சலம் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குத் திரண்டுவந்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்க எந்த கோரிக்கையும், அவசியமும் எழவில்லை. இது நூற்றுக்கணக்கான குடும்பங்களை அழிப்பதற்கு உண்டான செயலாகும். எனவே அந்தசெயலை தடுத்து நிறுத்த வேண்டுகிறோம். மேற்கண்ட தொழிற் பேட்டைக்கான அறிவிப்பானது அடிப்படை உரிமைகளையும், நாங்கள் வாழ்வதற்கான வசதிகளையும், விரும்பிய தொழிலை சட்டபூர்வமாக செயலையும் தடுக்கக் கூடியதாக உள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் வழங்கிய ஆட்சி மனுக்களை பரிசீலித்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு நிலவில் உள்ள காரணத்தினால் எங்களது நலத்தினை பொறுத்து, எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: