ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு

பெரம்பலூர், ஜன. 22: கள்ளப்பட்டி கிராமத்தில் பிப்- 28ம்தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி ஜல்லிக் கட்டு விழாக் குழு சார்பாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, பூலாம்பாடி அருகே உள்ள கள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், அதன் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று(21ஆம்தேதி) புதன் கிழமை காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

கள்ளப்பட்டி ஊர் மக்கள் சார்பாக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 29ம் தேதி மிக சிறப்பாக ஜல்லிக்கட்டு விழாவை நடத்தி முடித்தோம். அதேபோல் இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை அரசு நெறிமுறைகளின்படி, நீதிமன்ற உத்தரவுகளின் படி நடத்திட அனுமதியும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: