ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

பாடாலூர், ஜன.24: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று நாடு முழுவதும் நேற்று வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் நேற்று அரசு ஊழியர்கள் வாக்காள தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்று கொண்டனர்.

அதன்படி ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர்கள் தினத்தையொட்டி வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் முத்துக்குமரன் தலைமை வகித்தார். இதில் தாசில்தார் அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர். நிகழ்வில், அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.

மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்வது குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு) ரெங்கநாதன், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

 

Related Stories: