மேலப்புலியூர் அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு

பெரம்பலூர்,ஜன.30: மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டெய்சிராணி தலைமை வகித்துப் பேசினார். முதுகலை தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கவிஞர் இராமர் கலந்து கொண்டு சிறப்புரை பேசியதாவது:

சங்க இலக்கியங்களில் தமிழர்களின் வாழ்வியல் நெறிகள் குறித்து நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு புறநானூறு ஆகியவற்றில் இருந்து பல செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இக்கால மாணவர்கள் மதிப்பெண்கள் மட்டும் பெற தமிழை படிக்காமல், நமது உயர்தனிச் செம்மொழி உலகத்தின் மூத்த மொழியாம் தமிழ் மொழியிலுள்ள சங்க இலக்கியங்களை ஆர்வமுடன் படிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். இரு பால் ஆசிரியர்கள் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர். முடிவில் பட்டதாரி தமிழாசிரியர் சுமதி நன்றி கூறினார்.

 

Related Stories: