பெரம்பலூரில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர்,ஜன.26: பெரம்பலூரில் இந்தியஅரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மேரா யுவா பாரத் கேந்திரா சார்பாக 16ஆவது தேசிய வாக்காளர் தினவிழா விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மேரா யுவா பாரத் கேந்திரா ஆகியவற்றின் சார்பாக நேற்று பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில், பதினாறாவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட முதல்முறை வாக்காளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் பகுதிகளாக முதல் முறை வாக்காளர்கள் அனைவரும் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்று, எனது பாரதம் எனது வாக்கு என்ற வாசகத்தை முதல் முறை வாக்காளர்கள் ஏந்தி நடந்தனர். பிறகு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு மை பாரத் கேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா தலைமைவகித்தார். பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சரவணன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்விக் குழுமங்களின் பேராசிரியர் கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

 

Related Stories: